Home One Line P1 சங்கப் பதிவாளருக்கு முடா 7 நாட்கள் காலக்கெடு

சங்கப் பதிவாளருக்கு முடா 7 நாட்கள் காலக்கெடு

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முடா கட்சியின் பதிவு விவகாரம் தொடர்பாக அக்கட்சி முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் மற்றும் முன்னாள் வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை வழக்கறிஞர்களாக நியமித்துள்ளது என்று சைட் சாதிக் கூறினார்.

சங்கப் பதிவாளருக்கு எதிராக அக்கட்சி சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சி பதிவு செய்வதற்காக விண்ணப்பித்து 3 மாதக் காலம் ஆன போதும் இன்னும் அது பதிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

முடா கட்சி சங்கப் பதிவாளருக்கு ஏழு நாட்கள் வழங்குவதாகவும், இக்காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால், சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“முடாவை ஒரு முறையான அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான செயல்முறை செப்டம்பர் 17 தொடங்கியது. இருப்பினும், டிசம்பர் 21 வரை, முடா பதிவு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகையால், டிசம்பர் 21 அன்று, முடா, 100 முடா ஆதரவாளர்களுடன் சேர்ந்து சங்கப் பதிவாளர் அலுவலகத்திற்கு வருகைத் தந்துள்ளது. உடனடியாக கட்சியை அங்கீகரிக்கக் கோரி சட்ட நடவடிக்கை அறிவிப்பு கடிதத்தை சமர்ப்பித்தது, ” என்று அக்கட்சி வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.

“ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு சங்கத்தை உருவாக்குவதற்கான உரிமை மத்திய அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது, மேலும் சங்கப் பதிவாளரின் இந்த தாமதம் முடா கட்சியின் உரிமையை மறுக்கிறது” என்று சைட் சாதிக் கூறினார்.