Home One Line P1 இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணை அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம்

இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணை அவசரப்பட்டு விமர்சிக்க வேண்டாம்

590
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்லாமிய சட்டத்தின்படி இல்லாமல், இந்தியாவில் ஜோகூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார் என்ற கூற்றுகளை விசாரிக்க மாநில இஸ்லாமிய விவகாரத் துறைக்கு ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற கூற்றுகளால் தாம் வருத்தப்படுவதாகவும், பெண்ணின் குடும்பம் மற்றும் இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகம், மூலமாகவும் இது உண்மையா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராகிம் கூறினார்.

“நாம் அனைவரும் விரைவில் உண்மையை அறிவோம் என்று நான் நம்புகிறேன்” என்று சுல்தான் இப்ராகிம் கூறினார்.

#TamilSchoolmychoice

அந்த பெண் தற்போது ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டு வருவதாகவும், முன்கூட்டியே முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டதாகவும் சுல்தான் கூறினார்.

“அவர் இதுவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்புவதாக அறிவிக்கவில்லை. அவர் குறித்த விமர்சனங்களால் அவசரப்படுகிறோம் என்றால், அவர் நாடு திரும்புவதை யோசிப்பார். நாம் மலேசியாவிலும் இந்தியாவிலும் அவரது குடும்பத்தினரிடையே பிளவுகளை உருவாக்குவோம்,” என்று சுல்தான் மேலும் கூறினார்.

இஸ்லாமிய விதிமுறைகளை மீறக்கூடாது என்று சுல்தான் அந்தப் பெண்ணுக்கு அறிவுறுத்தினார்.

ஜோகூர் இஸ்லாமிய விவகாரத் துறை மற்றும் முப்தி அலுவலகம் ஆகியவை அந்த பெண்ணின் நம்பிக்கையைத் தக்கவைக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும் என்று தான் நம்புவதாக சுல்தான் இப்ராகிம் மேலும் கூறினார்.