திருவனந்தப்புரம்: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் 11 வயது சிறுவனுக்கு இலேசான வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார்.
இதேபோன்ற பாதிப்புகளுடன், 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று பதிப்பு இன்னும் முழுமையாக தீராத பட்சத்தில், இந்த புதிய கிருமி தொற்றுய் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பகுதியில்,’ஷிகெல்லா பாக்டீரியா (Shigella bacteria)’ தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே, நோயினால் பாதிகக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த கிருமி தொற்று அசுத்தமான நீர் அல்லது பழைய உணவை உட்கொள்வதன் மூலம் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.