கோலாலம்பூர்: பானாசோனிக் மலேசியா பெர்ஹாட், இன்று ஷா ஆலாமில் உள்ள இரண்டு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் 116 தொழிலாளர்கள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை மொத்தம் 2,137 தொழிலாளர்களை பரிசோதிக்கப்பட்டுள்ளாதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், மேலதிக அறிவிப்பு வரும் வரை பானாசோனிக் செயல்பாடுகள் நிறுத்தப்படும். கிருமிநாசினி நடவடிக்கைகளுக்காக அதன் தொழிற்சலைகள் டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை மூடப்படும்.
“எங்கள் ஊழியர்கள், சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். நிறுவனம் கொவிட் -19 தடுப்பு நடைமுறைகளை கடுமையாக கடைப்பிடித்து வருகிறது. எங்கள் உற்பத்தி வளாகங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் கிருமிநாசினிகள் தொடர்ந்து தெளிக்கப்படும். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கண்டிப்பாக நடத்தப்படும், ” என்று பானாசோனிக் கூறியது.