Home One Line P1 கொவிட்-19: புதிய சம்பவங்கள் 1,196 – ஒரே ஒரு மரணம்

கொவிட்-19: புதிய சம்பவங்கள் 1,196 – ஒரே ஒரு மரணம்

965
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 27) வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 1,196 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. நேற்று பதிவான எண்ணிக்கையான 2,335 என்பதைவிட இது கணிசமான அளவில் குறைவான தொற்றுகளாகும்.

இதில் உள்ளூரில் 1,191 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 5 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 105,096 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 997 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 84,411 – ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 20,233 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 111 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒருவர் மட்டும் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 452-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சிலாங்கூரில் மட்டும் இன்று 392  சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 202 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.சபா 186 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. ஜோகூரில் தொற்றுகளின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.