திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கொவிட்-19 தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த மாதம் தான் திறக்கப்பட்டன. ஆனால், 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது அரசின் விதிமுறை.
Comments