Home One Line P2 கமலா ஹாரிஸ் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார்

கமலா ஹாரிஸ் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார்

496
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அண்மையில் மருத்துவமனையில் கடந்த 22- ஆம் தேதி பிபைசர் தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டார். அதனை அடுத்து, வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் கொவிட்-19 தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டார். அவரது கணவரும் இந்த மருந்தினைப் பெற்ருக் கோண்டார்.

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று உச்சத்தை அடைந்து அதன் மக்கள் பலர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

அமெரிக்காவில் பிபைசர் மற்றும் மாடர்னா நிறுவன கொவிட்-19 தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“தடுப்பு மருந்து பெற்றுக் கொள்வது மிக எளிதானது. நன்றி, அதனை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது தடுப்பு மருந்து பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். உண்மையில் இது உயிர்களைக் காப்பாற்றுவதாகும். நான் விஞ்ஞானிகளை நம்புகிறேன்,” என்று கமலா ஹாரிஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.