Home One Line P1 ‘நான் இல்லையென்றால் மலாய்க்காரர்கள் ஆதரவு கிடையாது’- மகாதீர்

‘நான் இல்லையென்றால் மலாய்க்காரர்கள் ஆதரவு கிடையாது’- மகாதீர்

480
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி தன்னுடன் ஒத்துழைக்க மறுத்தால் அடுத்த பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற முடியாது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

2018 பொதுத் தேர்தலின் போது நம்பிக்கை கூட்டணியில் அவர் இணைந்து, எதிர்க்கட்சி கூட்டணிக்கு மலாய்க்காரர்களின் ஆதரவை உயர்த்த உதவியது என்பதன் அடிப்படையில் இது அமைந்துள்ளது என்று மகாதீர் கூறினார்.

“நான் மலாய்க்காரர்களின் ஆதரவைக் கொண்டுவந்ததால் தேசிய முன்னணியை வெல்ல உதவினேன். 18 இடங்களுக்கு மேல் பெறமுடியாத ஜசெக, 42 இடங்களைப் பெற நான் உதவிவேன், ஏனெனில் நான் கொண்டு வந்த மலாய்க்காரர்களின் ஆதரவு அடிப்படையில், ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனவே, நீங்கள் என்னை ஒதுக்கினால், நீங்கள் மலாய்க்காரர்களின் ஆதரவை நீக்கப்போகிறீர்கள், இழக்கப் போகிறீர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

2013 பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 89 இடங்களை வென்றது. ஜசெக 38 நாடாளுமன்ற இடங்களைப் பெற்றது. இந்த கூட்டணி, மகாதீர் நிறுவிய பெர்சாத்துவுடன், 2018 பொதுத் தேர்தலில் மொத்தம் 113 நாடாளுமன்ற இடங்களை வென்றது.

அமானா மற்றும் ஜசெக இன்னும் மகாதீருடன் தொடர்ந்து ஒத்துழைக்க விரும்பினாலும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அதில் ஒத்துழைக்காத சூழல் நிலவுகிறது.

அன்வாருடன் ஒத்துழைக்க விரும்புவதாக மகாதீர் கூறினார், ஆனால், பின்பு தனது அனைத்து திட்டங்களையும் அவர் நிராகரித்தார்.

2018 பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியும், சபாவை தளமாகக் கொண்ட வாரிசானும் வெற்றி பெற்றதையடுத்து மகாதீர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், பெர்சாத்து கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து 22 மாதங்களுக்குப் பிறகு அரசாங்கம் கவிழ்ந்தது.