Home One Line P1 முவாபாக்காட் நேஷனல் பிரத்தியேக குழு, கட்சிக்கானதல்ல

முவாபாக்காட் நேஷனல் பிரத்தியேக குழு, கட்சிக்கானதல்ல

479
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ, முவாபாக்காட் நேஷனல் உடனான கூட்டணி எந்தவொரு கட்சிக்கும் அல்லது குழுவிற்கும் பிரத்தியேகமானது அல்ல என்று பாஸ் தெரிவித்துள்ளது.

ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நீதியை விரும்பும் அனைவருக்கும் முவாபாக்காட் நேஷனல் தளமாக இருக்க வேண்டும் என்று அதன் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறினார்.

“2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அம்னோ மற்றும் பாஸ் இடையே கையெழுத்திடப்பட்ட சாசனத்தில் பாஸ் உறுதியாக நிற்கிறது. இது அரசியல் நிலைத்தன்மைக்கு மையமாக இஸ்லாமிய, மலாய் உரிமையை மறுக்காமல், மதம், இனம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை ஏற்க ஒப்புக் கொண்டது, ”என்று தக்கியுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கூட்டரசு அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள், அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் பன்முகத்தன்மை சமூக நீதியை உறுதிப்படுத்தும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இஸ்லாம், மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் மற்றும் குறிப்பாக மலேசியர்களின் நலனை வலுப்படுத்த முவாபாக்காட் நேஷனல் நிலையான நடைமுறையைக் கையாள வேண்டும் என்பதையும் பாஸ் வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் கூட்டணி, 15-வது பொதுத் தேர்தலில் ஒரே மாதிரியான இலட்சியங்களைக் கொண்ட எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் தக்கியுடின் கூறினார்.

“இந்த இலட்சியங்களையும், விருப்பங்களையும் அடைய, அனைத்து கட்சிகளும் சமாதானம், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நகர வேண்டும், ” என்று அவர் கூறினார்.