Home நாடு பெரிக்காத்தான் உடையாது! பாஸ் வெளியேறாது! – தக்கியூடின் உறுதி!

பெரிக்காத்தான் உடையாது! பாஸ் வெளியேறாது! – தக்கியூடின் உறுதி!

373
0
SHARE
Ad
தக்கியூடின் ஹாசான்

கோலாலம்பூர் : ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவது குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்ற ஆரூடங்கள் அண்மைய சில நாட்களாக வலுப்பெற்று வந்தன. அந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது உண்மைதான் என பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழுத் தலைவரும், தொர்புத் துறை அமைச்சருமான பாஹ்மி பாட்சில் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி உடைபடும் என்றும், பாஸ் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும் – பெர்சாத்து கட்சி தனித்து விடப்படும் – என்ற ஆரூடங்கள் எழுந்து வருகின்றன.

இந்த ஆரூடங்களை பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியூடின் ஹாசான் மறுத்திருக்கிறார். பாஸ் தொடர்ந்து பெரிக்காத்தான் கூட்டணியிலேயே இருந்து வரும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

தக்கியூடின் கிளாந்தான் கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.