Home நாடு 6 நாடாளுமன்றத் தொகுதிகள் : பெர்சாத்து கடிதம் கிடைத்ததை ஜோஹாரி அப்துல் உறுதிப்படுத்தினார்!

6 நாடாளுமன்றத் தொகுதிகள் : பெர்சாத்து கடிதம் கிடைத்ததை ஜோஹாரி அப்துல் உறுதிப்படுத்தினார்!

420
0
SHARE
Ad
ஜோஹாரி அப்துல்

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கட்சி அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரி அப்துல் அறிவித்தார். அந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்க தனக்கு 21 நாட்கள் கால அவகாசம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பெர்சாத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனால்ட் கியாண்டி அந்தக் கடிதத்தை அவைத் தலைவர் ஜோஹாரியிடம் சமர்ப்பித்தார்.

பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்ததற்காக அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இயல்பாகவே தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார்கள் என பெர்சாத்து கட்சி கூறி வருகிறது. பெர்சாத்து கட்சியின் சட்டவிதிகள் அவ்வாறு குறிப்பிடுகின்றன.

#TamilSchoolmychoice

பெர்சாத்துவின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரி அறிவிக்க வேண்டும் என பெர்சாத்து வலியுறுத்தி வருகிறது.

ஜோஹாரி அவ்வாறு அறிவிப்பாரா என பரபரப்புடனும் ஆர்வத்துடனும்  எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அந்த நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானால் ஒரே நேரத்தில் அவற்றுக்கு இடைத் தேர்தல் நடைபெறக்கூடும். ஜெலி, குவா மூசாங் (கிளந்தான்), புக்கிட் கந்தாங், கோலகங்சார் (பேராக்), தஞ்சோங் காராங் (சிலாங்கூர்), லாபுவான் (கூட்டரசுப் பிரதேசம்) ஆகியவையே சம்பந்தப்பட்ட அந்த 6 தொகுதிகளாகும்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஜூன் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.