Home நாடு 6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கடிதம் அனுப்பியது!

6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கடிதம் அனுப்பியது!

256
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்ததற்காக அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இயல்பாகவே தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார்கள் என பெர்சாத்து கட்சி கூறி வருகிறது.

அதற்கேற்ப நெங்கிரி (கிளந்தான்) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் முகமட் அசிசி அபு நைம் பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பெர்சாத்து கிளந்தான் சட்டமன்ற அவைத் தலைவருக்குத் தெரிவிக்க, அவரும் அந்தத் தொகுதி காலியானதாக அறிவித்தார். முகமட் அசிசி இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார். முகமட் அசிசி குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்துவின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரி அறிவிக்க வேண்டும் என பெர்சாத்து வலியுறுத்தி வருகிறது.

ஜோஹாரி அவ்வாறு அறிவிப்பாரா என பரபரப்புடனும் ஆர்வத்துடனும்  எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அந்த நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானால் ஒரே நேரத்தில் அவற்றுக்கு இடைத் தேர்தல் நடைபெற வேண்டும்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.