Home உலகம் விக்கி லீக்ஸ் தோற்றுவித்த அசாஞ்சே பிரிட்டனில் விடுதலை!

விக்கி லீக்ஸ் தோற்றுவித்த அசாஞ்சே பிரிட்டனில் விடுதலை!

110
0
SHARE
Ad
ஜூலியன் அசாஞ்ச்

இலண்டன் : ஒரு காலகட்டத்தில் முக்கிய நாடுகளின் அரசாங்க இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இணையத் தளம் விக்கி லீக்ஸ். ஜூலியன் அசாஞ்சே இதன் தோற்றுநர். குற்றவியல் வழக்கு ஒன்றின் காரணமாக இலண்டனில் சிறைத் தண்டனை பெற்ற ஜூலியன் அசாஞ்சே விடுதலையாகி ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அரசாங்கத்தை உளவு பார்த்த குற்றத்தை ஒப்புக் கொண்டு அவர் சட்டத் துறை அலுவலகத்துடன் சமரச உடன்பாடு கண்டு விடுதலையாகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது. 1,901 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அவர் நேற்று திங்கட்கிழமை ஜூன் 24-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. உடனடியாக ஆஸ்திரேலிய நகர் செல்லும் விமானத்தில் அவர் ஏறினார்.

#TamilSchoolmychoice

ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்றவராவார். ஜாமீன் மீதான நிபந்தனைகளை மீறிய குற்றங்களுக்காக அவர் ஏப்ரல் 2019-இல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்க அரசாங்கத்தை உளவு பார்த்த குற்றத்திற்காகவும், இரகசிய அரசாங்க ஆவணங்களை பெற்றதற்காகவும், பகிரங்கப்படுத்தியதற்காகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அவர் பகிரங்கப்படுத்திய ஆவணங்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க துருப்புகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பானவையாகும்.