Home One Line P1 மொகிதின் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டார்

மொகிதின் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டார்

357
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் நிலைமை மேம்பட்டு, தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பகாங்கில், 241 மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 5,032 குடும்பங்களைச் சேர்ந்த 18,976 பேர் அடங்குவர். அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

திரெங்கானுவில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் 267- ஆக அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

கிளந்தானில், எட்டு மையங்களில் 33 குடும்பங்களில் இருந்து 125 பாதிக்கப்பட்டவர்களை காலை 8 மணி வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராக்கில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 152 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 520 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரில், காலை 6 மணி நிலவரப்படி 20 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் இரண்டு தற்காலிக மையங்களில் தங்கி உள்ளனர்.

ஜோகூரில், வெள்ளம் நிலைமை சீரடையும் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 903 குடும்பங்களில் இருந்து காலை 8 மணி வரை 3,566 ஆகக் குறைந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) ஜோகூர் கோத்தா திங்கியில் ஏற்பட்ட வெள்ள நிலைமையை பிரதமர் மொகிதின் யாசின் பார்வையிட்டார்.

அத்துடன் கோத்தா திங்கி தொழிற்கல்வி கல்லூரி மற்றும் அட்மிரால் தேசிய பள்ளியில் இரண்டு தற்காலிக இடமாற்ற மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

“குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, ஒவ்வொரு இடமாற்ற மையங்களிலும் போதுமான உணவு வழங்கல் மற்றும் அடிப்படை தேவைகளை உறுதி செய்யப்படும். வெள்ளம் சூழ்ந்த இடமும் அரசாங்கத்தின் கவனம். இந்த உதவிகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கப்படும்.

“இதுவரையிலும் , கோத்தா திங்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இன்னும் கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால், தற்காலிக மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணக்கி செயல்படுவதைக் காண்கிறேன்,” என்று அவர் கூறியிருந்தார்.