Home One Line P1 கிராமி இசை, ஆஸ்கார் விருதுகள் மார்ச், ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு

கிராமி இசை, ஆஸ்கார் விருதுகள் மார்ச், ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு

551
0
SHARE
Ad

கலிபோர்னியா: லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 31- ஆம் தேதி திட்டமிடப்பட்ட கிராமி இசை விருது கலிபோர்னியாவில் வேகமாகப் பரவி வரும் கொவிட் -19 தொற்று காரணமாக மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரெக்கார்டிங் அகாடமி இது குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இது நிகழ்ச்சியை மார்ச் 14- க்கு ஒத்திவைத்துள்ளது.

#TamilSchoolmychoice

“லாஸ் ஏஞ்சல்ஸில் மோசமடைந்து வரும் கொவிட் நிலைமை மற்றும் மாநில மற்றும் உள்ளூர்அரசாங்கங்களின் புதிய வழிகாட்டுதல்கள் அனைத்தும் எங்கள் நிகழ்ச்சியை ஒத்திவைப்பது சரியானது என்ற முடிவுக்கு வந்துள்ளன,” என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

“எங்கள் இசை சமூகத்தில் உள்ளவர்கள் மற்றும் நிகழ்ச்சியைத் தயாரிப்பதில் அயராது உழைக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.”என்று அவர்கள் கூறினர்.

மற்ற விருது நிகழ்ச்சிகளான, எம்மிஸ் மற்றும் லத்தீன் கிராமிகள் போன்றவை பெரிய கூட்டங்களை தவிர்ப்பதற்காக இயங்கலையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் ஆஸ்கார் விருதுகள் ஏப்ரல் 25 அன்று முன்னதாக திட்டமிடப்பட்டதை விட எட்டு வாரங்கள் கழித்து நடைபெற உள்ளது.