Home One Line P2 பொங்கல் நேர்காணல்-ராகா அறிவிப்பாளர், அஹிலா சண்முகம்

பொங்கல் நேர்காணல்-ராகா அறிவிப்பாளர், அஹிலா சண்முகம்

494
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு நேர்காணலாக – ராகா வானொலியின் பிரபல அறிவிப்பாளர், அஹிலா சண்முகத்தின் சந்திப்பும், அவரது அனுபவங்களும் இடம் பெறுகிறது:

இவ்வாண்டு உங்களின் பொங்கல் கொண்டாட்டத் திட்டங்கள் யாவை?

இவ்வருடம் நான் எனது ‘தலைப் பொங்கலை’, எனது கணவரின் குடும்பத்தினருடன் கொண்டாடுவேன். திருமணத்திற்குப் பிறகு இது எனது முதல் பொங்கல். எனவே, சற்று வித்தியாசமான அனுபவம்தான். ஏனெனில், நான் முன்பு எனது உடனடி குடும்பத்தினருடன் மட்டுமே பொங்கலைக் கொண்டாடினேன். ஏனெனில், குடும்பத்துடன் பெருநாளைக் கொண்டாடுவது எப்போதும் சிறந்தது. மேலும், பொங்கலை முன்னிட்டு முழு வாரமும், ராகாவின் கலக்கல் காலை குழுவினர் வித்தியாசமான மற்றும் வேடிக்கையானப் பொங்கல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இரசிகர்களுக்கான உங்களின் பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

அனைத்து ராகா இரசிகர்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நேர்மறையான வருடத்தை வரவேற்கையில் கடந்தக் காலக் கசப்பான விஷயங்களை தூரம் தள்ளி 2021-ஆம் ஆண்டில் இப்பொங்கலை ஒரு நல்ல தொடக்கமாக வரவேற்போம். நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை செயல்முறைகளைப் பின்பற்றி பாதுகாப்பானப் பொங்கலைக் கொண்டாடுவோம். பாதுகாப்பாக இருப்போம்.
இலவச SYOK செயலியின் வழி எங்கும், எப்போதும் ராகாவை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.