Home One Line P1 தகவல் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

தகவல் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

ஜனவரி 11 அன்று பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு வந்ததும் சாஹிடிபரிசோதிக்கப்பட்டதாக அவரது அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாஹிடி தற்போது சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#TamilSchoolmychoice

“சாஹிடி தற்போது சீரான உடல் நிலையில் உள்ளார்,” என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், பொருளாதார விவகார அமைச்சர் முஸ்தபா முகமட் மற்றும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண் ஆகியோரும் கொவிட் -19 தொற்றுக்கு ஆளானதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.