Home One Line P1 எம்சிஎம்சி டுவிட்டர் கணக்கு குறித்த சந்தேகங்களை அமைச்சு கலைய வேண்டும்

எம்சிஎம்சி டுவிட்டர் கணக்கு குறித்த சந்தேகங்களை அமைச்சு கலைய வேண்டும்

733
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு பொறுப்பற்ற தரப்பினரால் ஊடுருவப்பட்டது என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி) கூற்றை வழக்கறிஞர் ஷாரெட்சான் ஜோஹன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் காரணமாக, எம்.சி.எம்.சி தனது கணக்கை நேற்றிரவு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

“கணக்கு உண்மையில் ஊடுருவப்பட்டிருந்தாலும், எந்த பழைய டுவீட்களையும் கையாளுவது சாத்தியமில்லை,” என்று இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளருமான அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

2014- ஆம் ஆண்டிலிருந்து வந்த டுவீட்களின் பதிவுகள், பெரும்பாலும் பொருத்தமற்ற மொழியைப் பயன்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில், குறிப்பாக அவசரகால அறிவிப்பின் பின்னணியில், சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது சமூக ஊடகப் பயனர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டதை அடுத்து, இந்த பதிவுகள் வெளியாகின.

பின்னர், இந்த டுவிட்டர் கணக்கை @Nazrulllhakim எனும் நபர் எம்.சி.எம்.சி கணக்கின் அசல் உரிமையாளர் என்றும், அவர் எந்த டுவீட்டையும் நீக்காமல், அவர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது மற்றொரு நபருக்கு விற்றதாகவும் கூறினார்.

அந்த நேரத்தில் அக்கணக்கு 50,000 பிந்தொடர்பவர்களைக் கொண்டிருந்ததாகவும், – மற்றொரு நபருக்கு 1,300 ரிங்கிட்டுக்கு விற்றதாகவும் கூறினார்.

இந்த விளக்கம் மேலும் கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது என்று ஷாரெட்சான் கூறினார்.

எம்.சி.எம்.சி அவ்வாறு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இது வெளிப்படையான முறையில் செய்யப்பட்டதா என்பதையும் அது விளக்க வேண்டும் என்று ஷாரெட்சான் கூறினார்.