Home One Line P2 ரஜினி பெயரில் கட்சி தொடங்கப்பட்டது

ரஜினி பெயரில் கட்சி தொடங்கப்பட்டது

863
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என தெரிவித்ததை அடுத்து, அவரது பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவிலிருந்து ரஜினிகாந்த் பின்வாங்கினார். ஆயினும், அவரது இசிகர்கள் அவரை தொடர்ந்து அரசியலில் ஈடுபட வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினிகாந்த் பெயரில் கட்சி தொடங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால், அவரது அறிவிப்பு அனைத்து மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்ததாகவும் கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தெரிவித்தார்.

“அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. ரஜினிகாந்த் கட்சி தொடங்காத நிலையில் நாங்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து புதிய கட்சி தொடங்கியுள்ளோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.