Home One Line P1 விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது

675
0
SHARE
Ad

ஜகார்த்தா: இந்தோனிசியாவில் ஜனவரி 9-ஆம் தேதி ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென நடுவானில் மாயமானது. அதன் பிறகு, விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தொடர்பான விவரங்கள் கருப்புப் பெட்டி வாயிலாக கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.