Home One Line P1 இந்தியாவில் முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது

இந்தியாவில் முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது

529
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொவிட்-19 தடுப்பு மருந்து இன்று சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

கொவிட்-19 தடுப்பு மருந்து இன்று காலை மும்பை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

தடுப்பூசி போடும் நிகழ்வை காணொலி மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

பொதுவாக, ஒரு தடுப்பு மருந்து தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும் என்றும், ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில், இரண்டு தடுப்பு மருந்துகளை இந்தியாவில் தயாரித்திருப்பது பெருமைக்குரியது என்று மோடி தெரிவித்தார்.

கொவிட்-19 தடுப்பு மருந்து இரண்டு அளவுகளில் இருப்பது மிகவும் முக்கியமாகும். முதல் மற்றும் இரண்டாவது மருந்துகளுக்கு இடையில், குறைந்தது ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியா தனது முதல் கட்ட தடுப்பு மருந்து போடும் திட்டத்தில் 3 கோடி மக்களுக்கு தடுப்பு மருந்து போடுப்பட உள்ளதாக மோடி கூறினார்.