Home One Line P1 டாப் குளோவ் தொழிற்சாலைகளில் 4 பாதிக்கப்பட்டுள்ளன

டாப் குளோவ் தொழிற்சாலைகளில் 4 பாதிக்கப்பட்டுள்ளன

427
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் தங்களின் நான்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டாப் குளோவ் பெர்ஹாட் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

போர்ட் டிக்சன் (நெகிரி செம்பிலான்), சுங்கை புலோ (சிலாங்கூர்), ஷா ஆலாம் (சிலாங்கூர்) மற்றும் கூலிம் (கெடா) ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் தொற்று ஏற்பட்டுள்ளதை நிறுவனம் இன்று ஓர் அறிக்கையில் அடையாளம் கண்டுள்ளது.

போர்ட் டிக்சனில் அனைத்து ஊழியர்களும் ஜனவரி 14- ஆம் தேதி சுகாதார அமைச்சினால் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

சுங்கை புலோ தொழிற்சாலை பணியாளர்கள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கூலிம் மற்றும் ஷா ஆலாமில் ஊழியர்களின் நெருங்கிய தொடர்புகளுடன் தற்போது பரிசோதனை நடைபெற்று வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கான அனைத்து தொடர்புடைய செலவுகளும் நிறுவனத்தால் ஏற்கப்படும்.

“டாப் குளோவ் ஊழியர்களின் உடல்நலம், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், முன்னணிப் பணியாளர்களையும் பாதுகாப்பதற்காக நிறுவனம் தொடர்ந்து உயர்தர மருத்துவ கையுறைகளைத் தயாரிப்பதால், எங்கள் ஊழியர்களையும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களையும் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை கடைபிடிக்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெராதாய் கொவிட் -19 தொற்று குழுவின் மூலமாக டாப் குளோவ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது நேற்றைய நிலவரப்படி 6,934 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களுடன் மிகப்பெரிய தொற்று குழுவாக உருவெடுத்துள்ளது.