Home One Line P1 தேசிய கூட்டணியுடன் உடன்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட வேண்டும்!

தேசிய கூட்டணியுடன் உடன்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட வேண்டும்!

440
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி உடன் உடன்படாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக தீர்மானித்து, தங்கள் ஆதரவை சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்குமாறு பெஜுவாங் கட்சியின் இளைஞர் பிரிவு பரிந்துரைத்தனர்.

மாமன்னர் தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசியலமைப்பின் 43-வது பிரிவுக்கு ஏற்ப ஒரு புதிய பிரதமரை நியமிக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அதன் தலைவர் அபு ஹாபீஸ் சல்லே ஹுடின் கூறினார்.

சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கூட்டணிக்கு ஆதரவாக தங்கள் ஆதரவை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து மொகிதின் யாசின் பிரதமர் பதவியை தக்க வைத்திருப்பது சரியாகாது என்று அபு ஹாபீஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

தற்போதைய அவசரகாலத்தின் போது, பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரம் மொகிதின் ஆட்சியில் இருக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 12-ஆம் தேதி மாமன்னர் அவசரகால பிரகடனத்த்தை அறிவிக்க ஒப்புக் கொண்டார்.

கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்க நடவடிக்கையாக இந்த அறிவிப்பு கூறப்பட்டது. புதிய தினசரி சம்பவங்கள் இப்போது நான்கு இலக்க எண்ணை எட்டியுள்ளன.

அதே நேரத்தில், தேசிய கூட்டணி மற்றும் மொகிதின் பதவியை விட்டு அகற்றப்படுவதை தடுப்பதற்கான ஒரு நடவடிக்கை இது என்று பலர் கூறி வருகின்றனர்.