Home One Line P2 அமித் ஷாவை புதுடில்லியில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

அமித் ஷாவை புதுடில்லியில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

718
0
SHARE
Ad

புதுடில்லி : எந்த நேரத்திலும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுடில்லி சென்றுள்ளார். அவருடன் தமிழக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட குழுவினர் உடன் சென்றுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை இரவு உள்துறை அமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை அவரது இல்லத்தின் பழனிசாமி சென்று கண்டார்.

பாஜகவுடனான அதிமுக கூட்டணி, மற்ற கட்சிகளுடனான கூட்டணி ஆகிய விவகாரங்களையும் மற்ற தமிழக அரசு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அந்த சந்திப்பின்போது சென்னை மரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொள்ள மோடிக்கு அவர் அழைப்பு விடுப்பார் எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.