Home One Line P2 பிரபல புற்றுநோய் மருத்துவர் சாந்தா காலமானார்

பிரபல புற்றுநோய் மருத்துவர் சாந்தா காலமானார்

558
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவில் பிரபல புற்றுநோய் மருத்துவரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான சாந்தா (93), உடல்நலக் குறைவு காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

மருத்துவத் துறையில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்காக பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் சாந்தா பெற்றுள்ளார்.

அவரின் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” மருத்துவர் சாந்தாவின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும் அவரது சிகிச்சை முறைகள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும். மருத்துவர் சாந்தாவின் நற்பெயருக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும், அவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையிலும் அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்,” என்று டுவிட்டரில் பதிவிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மறைந்த மருத்துவருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“புற்றுநோய் சிகிச்சைக்காக ஆற்றியுள்ள ஆக சிறந்த பங்களிப்புக்காக சாந்தா அவர்கள் என்றென்றும் நாட்டு மக்களால் நினைவுகூரப்படுவார். இவர் ஏற்படுத்திய சென்னை அடையாறு மருத்துவமனை ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் சிறந்தது விளங்குகிறது. 2018- இல் இந்த மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தருணம் தற்போது நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,” என்று மோடி பதிவிட்டுள்ளார்.