சென்னை: சசிகலா தற்போது விடுதலையாகி உள்ள நிலையில், அமமுக- அதிமுகவுடன் இணைவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது சசிகலாவை சென்னை அழைத்து வர வேலைகள் நடந்து வருவதாகவும், மருத்துவர்களை சந்தித்து சசிகலாவை எப்போது வீட்டுக்கு அழைத்துச் செல்வது என மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்நேரத்தில் தாங்கள் அரசியல் பேச விரும்பவில்லை என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பித்ததே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை மீட்டெடுத்து உண்மையான அம்மா ஆட்சியை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் என்று தினகரன் கூறியுள்ளார்.
முன்னதாக, சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த சசிகலா இன்று விடுவிக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று விடுவிக்கப்படுவார் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
2017- ஆம் அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் இரு முறை பிணையில் சசிகலா வெளியே வந்துள்ளார்.
அண்மையில், அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று அவர் விடுதலையாவதை முன்னிட்டு, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சசிகலாவின் விடுதலை ஆவணத்தில் கையெழுத்து பெற்றனர்.
சசிகலா விடுதலையானதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சிகிச்சை முடிந்து பிப்ரவரி 3- ஆம் தேதி சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.