Home அரசியல் பத்துகேவ்ஸ் தொகுதியில் காஜாங் ரவி போட்டியா? ம.இ.கா கிளைத் தலைவர்கள் எதிர்ப்பு

பத்துகேவ்ஸ் தொகுதியில் காஜாங் ரவி போட்டியா? ம.இ.கா கிளைத் தலைவர்கள் எதிர்ப்பு

507
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 19- பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் காஜாங் ரவி போட்டியிடுவதற்கு பல ம.இ.கா.கிளைத்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அண்மையில் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.

அதன்படி பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் காஜாங் ரவி என்றழைக்கப்படும் ரவிசந்திரன் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இப்பொதுத்தேர்தலில் பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கோம்பாக் தொகுதித் தலைவர் ஜெயக்குமாரை வேட்பாளாராக அறிவிக்க வேண்டும் என்று ம.இ.கா.கிளைத்தலைவர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ம.இ.காவிற்காக உழைத்து கொண்டிருக்கும் ஜெயகுமார் மிகச்சிறந்த வேட்பாளர்.

ஆனால் அவருக்கு பதிலாக காஜாங் ரவியை தேர்ந்தெடுத்திருப்பது ஏற்று கொள்ள முடியாதது என்று கோம்பாக் துணைத் தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.

நாளை வேட்புமனு தாக்கல் செய்யபடவுள்ளதால் டத்தோஸ்ரீ பழனிவேல் அவர்கள், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி ஜெயக்குமாரை வேட்பாளாராக அறிவிக்கும்படி 30க்கும் மேற்பட்ட கிளைத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஜாங் ரவி பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டால் ஆதரவு தெரிவிக்க மாட்டோம். பிரச்சாரத்திலும் ஈடுபட மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.