Home அரசியல் சிலாங்கூர் மாநில மக்களுக்காக 56 அம்சங்கள் கொண்ட சிறப்பு தேர்தல் கொள்கையை பிரதமர் வெளியிட்டார்

சிலாங்கூர் மாநில மக்களுக்காக 56 அம்சங்கள் கொண்ட சிறப்பு தேர்தல் கொள்கையை பிரதமர் வெளியிட்டார்

474
0
SHARE
Ad

Najibஷாஆலம், ஏப்ரல் 19- அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி, அம்மாநில மக்களுக்காக 56 அம்சங்களைக் கொண்ட தேர்தல் கொள்கை அறிக்கையை பிரதமர் நஜிப் வெளியிட்டார்.

வளமான எதிர்காலம், பாதுகாப்பான வாழ்க்கைத் தரம், மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப வீடமைப்புத் திட்டங்கள், புத்தாக்க போட்டியிடும் ஆற்றல் கொண்ட சிலாங்கூர் உள்ளிட்ட 56 அம்சங்களைக் கொண்ட தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பேறு குறைந்தவர்கள், ஏழைகளுக்கு 250 வெள்ளி உதவி நிதி, யூ.பி.எஸ்.ஆர். தொடங்கி எஸ்.டி.பி.எம்.கல்வி பயிலும் மாணவர்களுக்கு 200 வெள்ளி புத்தக பற்றுச் சீட்டு, சிலாங்கூர் மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 500 வெள்ளி கல்வி சேமிப்புத் திட்டம் உள்ளிட்டவைகள் இந்த கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.