புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 8,635 புதிய கொவிட்-19 சம்பவங்களுடன், இந்தியா கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் மிகக் குறைந்த சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஆண்டு ஜூன் 1 முதல் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை விட மிகக் குறைவாகும். ஞாயிற்றுக்கிழமை 5.04 இலட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 10,000- ஐ விடக் குறைவான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
திங்களன்று 94 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மே 11- க்குப் பிறகு மிகக் குறைவானது. கடந்த ஆண்டு ஜனவரி 30- ஆம் தேதி முதல் மொத்தம் 1,07,66,245 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் 3,459 புதிய சம்பவங்களும், மகாராஷ்டிராவில் 1,948 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அக்டோபர் முதல், ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது.