கோலாலம்பூர் :ஆஸ்ட்ரோவில் ஒளியேறிவரும் ‘சீரியல் பேய்’ தொலைக்காட்சித் தொடர் இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்தத் தொடரின் இயக்குநர் எம்.எஸ். பிரேம் நாத், அதில் நடித்த ‘புன்னகைப் பூ’ கீதா இருவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்:
இயக்குநர்: எம்.எஸ். பிரேம் நாத்
• ‘வேற வழி இல்ல’, ‘ரைஸ்: இனி கலிலா’ (Rise: Ini Kalilah) மற்றும் ‘இருள் கோஸ்ட் ஹோட்டல்’ (Irul Ghost Hote)’ போன்ற நான்கு திரைப்படங்களை இயக்கியதோடு எண்ணிலடங்கா உள்ளூர் திரைப்படங்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளேன்.
‘நெஸ்ட்’ குறும்படம் மற்றும் ‘மைந்தன்’ திரைப்படத்திற்கானச் சிறந்த தொகுப்பாசிரியர் விருதுகளையும் ‘வேற வழி இல்ல’ திரைப்படத்திற்கானச் சிறந்த ஆஸ்ட்ரோ முதல் திரை (Astro first) விருதையும் வென்றுள்ளேன்.
எனது அனுபவம் மற்றும் தயாரிப்பாளர்கள், டேனேஸ் குமார் மற்றும் டாக்டர் விமலா பெருமாள் மற்றும் தயாரிப்புக் குழுவினர் ஆகியோரின் உதவியுடன் இந்தத் தொடரைத் தயார்படுத்தும் பணி மிகவும் எளிமையானது. இரசிகர்களை மிகவும் கவர்ந்திழுக்க நாங்கள் நிறைய ‘எஸ்.எஃப்.எக்ஸ்’ (sfx) மற்றும் ‘வி.எஃப்.எக்ஸ்’ (vfx) போன்றவற்றைத் தொடரில் பயன்படுத்தினோம்.
நடிகை: ‘புன்னகைப் பூ’ கீதா
• சீரியல் பேய் தொடரில் நான் ராகா வானொலி அறிவிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்தேன்- அடிப்படையில், அது எனது நிஜ வாழ்க்கை வேலையாகும். ஆரம்பத்தில், இது சற்று வித்தியாசமாக இருந்தது. பின், நான் கதாபாத்திரத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டேன்.
எனது நிஜ வாழ்க்கையில், ராகாவில் மர்ம தேசம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் நேயர்கள் அவர்களின் அமானுஷ்ய அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்வர். மாறாக, சீரியல் பேய் தொடர் பேய் வேட்டையைப் பற்றியது. தொலைக்காட்சித் தொடரிலும் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் தொடர்பான நிகழ்ச்சியிலும் நடித்தது இதுவே எனது முதல் முறையாகும்.
நேரலைப் படப்பிடிப்பில் நாங்கள் எதனுடன் தொடர்புக்கொள்கிறோம் என்பது தெரியாமல் நடித்தது புதிதாகவும் மிகவும் சவாலானதாகவும் இருந்தது. ஆனால், சற்று வேடிக்கையாக இருந்தது. இது எனக்கு ஒரு சுவாரசியமானப் பயணமாக இருந்தது. அதன் விளைவுகளும் சுவாரசியத்தைத் தந்தது