தமிழகத்தில் திராவிடப் பாரம்பரிய ஆட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. 1967-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராகப் பதவியேற்று, மெட்ராஸ் மாநிலமாக இருந்த பெயரை தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம் காண காரணமாக இருந்தவர் அண்ணா.
அவரது கடந்த கால வாழ்க்கையில் அவரது சமகாலத் தலைவர்களுடனும், கட்சியினரோடும் அவர் காணப்படும் சில புகைப்படங்களை இங்கே காணலாம்.
அவரது நினைவு நாளான இன்று அவரது வழியில் இரு தனிப் பெரும் கட்சிகளாக வளர்ந்து நிற்கும் திமுக, அதிமுக இரு கட்சிகளின் தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

