Home One Line P1 கட்சி அரசியலமைப்பிற்கு ஏற்றவாரு தலைவர் பதவியை மதிக்க வேண்டும்

கட்சி அரசியலமைப்பிற்கு ஏற்றவாரு தலைவர் பதவியை மதிக்க வேண்டும்

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜனநாயக ரீதியாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், கட்சி அரசியலமைப்பையும், தாம் வகிக்கும் கட்சித் தலைவர் பதவியையும் மதிக்குமாறு அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.

பதவி விலகுவது பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது என்று அவர் கூறினார். அவர் பதவி விலகக் கோரிய பல அம்னோ தொகுதிகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அம்னோ உறுப்பினர்கள் பிரதிநிதிகள் எடுத்த தேர்வை மதிக்க வேண்டும் என்று சாஹிட் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாம் அரசியலமைப்பை மதிக்க வேண்டும். எனவே இதை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் மதிக்க வேண்டும், ” என்று அவர் ஒரு நேர்காணலில் கூறினார்.

முன்னதாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அம்னோ அடிமட்ட தலைவர்கள் சாஹிட் ஹமிடி பதவி விலகுமாறு அழைப்பு விடுத்துவந்தனர்.