Home One Line P1 தேர்தல் தேவையில்லை- மக்கள் ஆணை திருப்பித் தரப்பட வேண்டும்

தேர்தல் தேவையில்லை- மக்கள் ஆணை திருப்பித் தரப்பட வேண்டும்

492
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கூட்டணி உள்ளது, ஆனால், அதற்கு பதிலாக மக்கள் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.

“மலேசியர்கள் இந்த நேரத்தில் தேர்தல்களை விரும்பவில்லை. ஆனால், தொற்று மற்றும் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க அரசியல் நிலைத்தன்மையை விரும்புகிறார்கள் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. எனவே தேர்தல் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கூட்டணி உள்ளது. 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை 2023 வரை செல்லுபடியாகும். தேவை என்னவென்றால், உடனடி விகிதத்தில், சரியான கட்சிக்கு ஆணையை திருப்பித் தருவதுதான்,” என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் பி.கே.ஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அமனா பொதுச் செயலாளர் ஹட்டா ராம்லி மற்றும் ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் லோக் சீவ் போக் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.