Home One Line P1 பேராக்கில் இடைநிலைப் பள்ளி கடுமையான கட்டுப்பாட்டு கீழ் வைக்கப்படும்

பேராக்கில் இடைநிலைப் பள்ளி கடுமையான கட்டுப்பாட்டு கீழ் வைக்கப்படும்

521
0
SHARE
Ad

ஈப்போ: கெரிக்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா II இடை நிலைப்பள்ளி, 24 கொவிட் -19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதால், நாளை முதல் அது கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்படும்.

பிப்ரவரி 19- ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு நீடிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சகம் பள்ளியில் பரிசோதனைகளை நடத்துவதற்கும் சமூகத்திற்குள் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் கடடுமையான கட்டுப்பாட்டு உத்தரவு உதவும், ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இப்பள்ளியைத் தவிர, சரவாக்கில் இரண்டு கிராமங்களான கம்போங் செபாகோ 1 மற்றும் 2 ஆகியவையும் நாளை கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படும்.