Home One Line P1 கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி

831
0
SHARE
Ad

சென்னை: 16.43 இலட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 16.43 இலட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெற்ற 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.