Home One Line P1 சீனப் புத்தாண்டு: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மறுஆய்வு செய்ய ஜசெக கோரிக்கை

சீனப் புத்தாண்டு: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மறுஆய்வு செய்ய ஜசெக கோரிக்கை

546
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் மறுஆய்வு செய்யுமாறு ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

“சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தங்களது சமீபத்திய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மதிப்பாய்வு செய்து சரிசெய்யுமாறு ஜசெக மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறது. இது சீன சமூகத்தின் மீது அக்கறை இல்லாத மற்றும் முற்றிலும் அவமரியாதைக்குரியது. இது வழக்கமான இரவு உணவு அல்ல,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று தீபகற்ப மாநிலங்களிலும் சபாவிலும் புத்தாண்டின் போது, ஒன்றாக வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் சந்திப்புகள் மட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

வீடு வீடாக செல்வது, மாவட்டம், மாநிலங்களைக் கடப்பது போன்ற பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

சீனப் புத்தாண்டு இந்த ஆண்டு பிப்ரவரி 12 அன்று கொண்டாடப்பட இருக்கிறது.

“இரவு சந்தைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு வீடுகளில் வசிப்பதால் குடும்பங்களை பார்க்க முடியவில்லை, ” என்று அவர் கூறினார்.