Home One Line P2 ஆஸ்ட்ரோ : புகழ் பெற்றத் திரைப்படங்களின் இலவசத் திரையீடு

ஆஸ்ட்ரோ : புகழ் பெற்றத் திரைப்படங்களின் இலவசத் திரையீடு

424
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் புத்ரா பிராண்ட் (வணிக முத்திரை) விருதுகள் 2020- (Putra Brand Awards 2020) ஆஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டதை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் விதமாக,  தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டத் திரைப்பட அலைவரிசைகளில் இலவசத் திரைப்படத் திரையீட்டை, எதிர்வரும் பிப்ரவரி 11 முதல் 21 வரை, அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிப்பதில் ஆஸ்ட்ரோ மகிழ்ச்சியடைகிறது.

HBO (அலைவரிசை 411 எச்டி/அலைவரிசை 431), FOX Movies (அலைவரிசை 413 எச்டி /அலைவரிசை 433), FOX Action Movies HD (அலைவரிசை 415), FOX Family Movies HD (அலைவரிசை 414), CINEMAX (அலைவரிசை 412 எச்டி /அலைவரிசை 432) மற்றும் tvN Movies HD (அலைவரிசை 416) ஆகிய அலைவரிசைகளில் புகழ்பெற்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் திரையீட்டின் வழி அதிகமானப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

HBO அலைவரிசையில் Birds Of Prey And The Fantabulous Emancipation Of One Harley Quinn மற்றும் Spider-Man: Far From Home, Fox Movies அலைவரிசையில் Bad Boys for Life மற்றும் Little Women ஆகியப் பிரபலமான ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள் அவற்றுள் அடங்கும். HBO வழங்கும் பிரபலமான அனிமேஷன் நிகழ்ச்சியான, Despicable Me 2 மற்றும் அதிரடி-சாகச நகைச்சுவை நிகழ்ச்சியான, Sonic The Hedgehog ஆகியவற்றைக் குழந்தைகள் கண்டுக் களிக்கலாம். Train To Busan’s sequel Peninsula, Okay! Madam, Tazza: The High Rollers மற்றும் Love + Sling ஆகியவற்றின் வழிச் சிறந்த நட்சத்திரங்கள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளை tvN Movies அலைவரிசையில் கொரியத் திரைப்படங்களின் இரசிகர்கள் கண்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

மக்கள் தேர்வு விருது என அழைக்கப்படும் புத்ரா பிராண்ட் விருதுகள், வாடிக்கையாளர்களின் விருப்பத்தால் அளவிடப்படும் ஒருங்கிணைந்த வணிக முதலீடாக வணிக முத்திரைத் தர மேம்பாட்டை அங்கீகரிக்கிறது.

மேலும், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 18 வரை, குழந்தைகள் அலைவரிசைத் தொகுப்பில் இடம்பெற்ற அனைத்து அலைவரிசைகளையும் மற்றும் செய்தி அலைவரிசைகளையும் (SKY News-ஐத் தவிர) இலவசமாகக் கண்டுக் களிக்கலாம். ‘60-ஆம் முதல் ‘90-ஆம் ஆண்டுகள் வரையிலானப் பிளாக்பஸ்டர்களான Jaws 3-D, Edward Scissorhands மற்றும் Back To The Future ஆகியவற்றை உள்ளடக்கிய HITS Movies HD (அலைவரிசை 401)-ஐ 21 பிப்ரவரி 2021 வரைத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இலவசமாகக் கண்டு மகிழலாம்.

குறிப்புகள்:

FOX Movies (அலைவரிசை 413 எச்டி / அலைவரிசை 433), FOX Action Movies HD (அலைவரிசை 415) மற்றும் FOX Family Movies HD (அலைவரிசை 414) ஆகிய அலைவரிசைகளில் இடம்பெறும் திரைப்படங்களின் இலவசத் திரையீடுத் தொலைக்காட்சியில் மட்டுமே கிடைக்கப் பெறும்.

இலவசத் திரையீடுக் காலத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை அறியக் கீழ்க்காணும் பின் இணைப்பை அணுகவும்.