கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் விசாரணை நீதிபதியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தவறாகத் தொடர்பு படுத்திய தனது டுவிட்டர் பதிவின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரமேஷ் ராவ் மறுத்துள்ளார்.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில் 42 மில்லியன் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றவாளி என்று தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி மகாதீரின் பேரன் என்று அவர் முன்பு கூறியிருந்தார்.
இணையத்தை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் இன்று காலை தைப்பிங் அமர்வு நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
ஒருவர் உத்தரவாதத்துடன் அவருக்கு 6,000 ரிங்கிட் பிணையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வழக்கை அமர்வு நீதிபதி ஜூல்ஹெல்மி ஹாசன் மார்ச் 1- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.