வாஷிங்டன்: 2001 FO32 என அழைக்கப்படும் விண்கல் மார்ச் 21- ஆம் தேதியன்று பூமியை நெருங்கி வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூமியில் இருந்து இது குறைந்தது 2,016,351 கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கல் சூரிய குடும்பத்தில் இருக்கும் எல்லா விண்கற்களையும் விட மிகப்பெரிய இராட்சத விண்கல் என கூறப்படுகிறது.
ஒரு கிலோமீட்டர் விட்டத்துக்கு மேல் பெரிய விண்கற்கள் தொடர்ந்து ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 1908- ஆம் ஆண்டில் 80 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் துங்குஸ்கா, சைபீரியாவில் மோதியதில் அங்குள்ள மரங்கள் காணாமல் போய்விட்டன.
இதே விண்கல் ஏதேனும் நகரத்தில் மோதியிருந்தால் நகரமே அழிந்திருக்கும்.