வாஷிங்டன்: பூமியை நோக்கி மிகப்பெரிய இராட்சத விண்கல் நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இராட்சத விண்கல்லின் விட்டம் 0.51 கிலோமீட்டர். இது பூமியை 4,302,775 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கவுள்ளது. இந்த விண்கல்லுக்கு 153201 2000 WO107 என பெயரிடப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) இந்த இராட்சத விண்கல் பூமியை கடந்துவிடும் என நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆபத்தான இராட்சத விண்கல் பூமியை மோதினால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் சேதங்கள் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், பூமியை இந்த விண்கல் தாக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.