Home One Line P1 ஈபிஎப்: புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமீர் ஹம்சா நியமனம்

ஈபிஎப்: புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமீர் ஹம்சா நியமனம்

478
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் (டி.என்.பி) தலைமை நிர்வாகி அமீர் ஹம்சா அசிசான் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈபிஎப்பின் அறிக்கையின்படி, அமீரின் நியமனம் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

படம்: அமீர் ஹாம்சா

ஆகஸ்ட் 2018- இல் ஓய்வூதிய நிதிக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்ட துங்கு அலிசக்ரி ராஜா முகமட் அலியாஸ்க்கு பதிலாக அமீர் அப்பதவியில் அமர்வார். சமீபத்திய மாதங்களில், துங்கு அலிசக்ரி ஈபிஎப் ஐ-சினார், பணத்தை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.

#TamilSchoolmychoice

ஈபிஎப் தலைவர் அகமட் பத்ரி முகமட் ஜாஹிர், துங்கு அலிசக்ரியின் கடந்த ஏழு ஆண்டு அர்ப்பணிப்பு மற்றும் பணிக்காக வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.