Home One Line P2 ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

599
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிப்ரவரி 2021 நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

புதன், 10 பிப்ரவரி முதல்

இருவர் (புதிய அத்தியாயங்கள் – 3-5)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

உண்மை மற்றும் ‘ரீல்’ வாழ்க்கைக்கு இடையேயான கோடு மங்கலாகும்போது என்ன நடக்கும்? வெறும் கதையாகத் தொடங்கினாலும் நாளடைவில் அக்கதை மெதுவாக எழுத்தாளர் சஹானாவின் வாழ்க்கையை பாதிக்கும் பயணமாக மாறுகிறது. ஓர் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டை வெளிக்கொணரும் ஒரு இலக்கைக் கொண்ட பயணம்.

அசுர வேட்டை (புதிய அத்தியாயங்கள் – 8-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹரிதாஸ், சங்கீதா கிருஷ்ணசாமி, பானுமதி & வெமன்னா அப்பனா
தடயங்களைத் தொடர்ந்து, சில்வா மேலும் கொலைகள் நடக்கும் என அறிகிறார். சில்வா அதனை அமீதாவிடம் கூறவே, சில்வாவை அமீதா கேலி செய்கிறார். மற்றொரு கொடூரமானக் கொலை நடைபெறுகிறது.

இப்படிக்கு இலா (புதிய அத்தியாயங்கள் – 7-8)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: ஹரிந்தரா நந்த குமார், தனேஷ் ரூபன் அலகராசு, சஷ்வின் சந்திரசேகரன், யுவராஜ் கிருஷ்ணசாமி, கே. பிரகாஷ் & கிரானா ராமச்சந்திரன்

1990-இல் பிறந்த இலக்கியன் என்ற சிறுவனின் அப்பாவித்தனம், ஆர்வம் மற்றும் குறும்புத்தனம் ஆகியவை அவனைத் தொடர்ந்துத் தனது தாயுடன் சிக்கலுக்குள்ளாகவே அவனது தந்தை அவனுக்கு ஆதரவளித்தார். சன்வே புறநகரில் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கும் இலா எனும் சிறுவனின் மூன்று வெவ்வேறு கட்டங்களில் அவனது வாழ்க்கையை இக்கதை விவரிக்கிறது. ஒவ்வொரு கட்டமும் 90-ஆம் ஆண்டுகளின் சகாப்தத்தை சித்தரிக்கின்றது. அதே நேரத்தில், இலாவின் பெற்றோருடனான அவனது உறவை வெளிக்கொணர்கிறது.

வியாழன், 11 பிப்ரவரி முதல்

மாஸ்டர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

Astro First (அலைவரிசை 480)

நடிகர்கள்: விஜய் & விஜய் சேதுபதி

குற்றச் செயல்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்தும் ஒரு குண்டருக்கும் ஒருவருக்கும் மோதல் ஏற்படுகிறது.

யாரா (Yaara) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: வித்யுத் ஜம்வால், ஸ்ருதி ஹாசன் & அமித் சாத்

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நண்பரை மீட்பதற்காக முன்னாள் குற்றவாளிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.

வெள்ளி, 12 பிப்ரவரி

காவல்துறை உங்கள் நண்பன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சுரேஷ் ரவி

ஒரு பொது அரசு ஊழியர் எதிர்பாராத விதமாக ஒரு காவல் நிலையத்திற்குள் நுழையும் போது பயங்கரமான நிகழ்ச்சிகள் ஏற்படுகின்றன.

சூரரைப் போற்று

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சூர்யா & அபர்ணா பலமுரளி

ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது சுய விமானச் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கனவுக் காண்கிறான். இருப்பினும், அவன் வெற்றிபெறப் பல தடைகளையும் சவால்களையும் எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.

சனி, 13 பிப்ரவரி

இக்கே பெ இக்கா (Ikke Pe Ikka) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் குமார் & சாந்தி பிரியா

மனைவியை இழந்த ஒரு பணக்காரரின் மகன்கள் அவரது வியாபாரத்தில் ஆர்வம் காட்டாமல் அண்டை வீட்டுக்காரர் மகள்களைக் காதலிக்கின்றனர். அவர்களின் காதலைத் தடுக்க அவர் தனது அண்டை வீட்டுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி

ரங்கீலா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அமீர் கான், ஜாக்கி ஷெராஃப் & உர்மிளா மாடோண்ட்கர்
பாலிவுட் புகழாக வேண்டும் எனக் கனவு காணும் ஒரு நடுத்தர வர்க்க இளம் பெண், தனது குழந்தை பருவ நண்பருக்கும் பிரபல நடிகருக்கும் இடையிலான முக்கோண காதலில் சிக்கிக் கொள்கிறாள்.

ரசிக்க ருசிக்க சீசன் 6 (புதிய சீசன்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாகப் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொகுப்பாளர்கள்: ஷேபி & பிரசாத்

ஷேபி மற்றும் பிரசாத் ‘ரசிக்க ருசிக்க’ சீசன் 6-ஐத் இனிதே தொடங்குகிறார்கள். இம்முறை உணவு விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் மலிவான மற்றும் சுவையான உணவு வகைகளைத் தேடி செல்கின்றனர்.

ஜி.வி.எம் லைவ் இன் கோன்சட்

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசைக் கலைஞர்களான, சித் ஸ்ரீராம், பம்பை ஜெயஸ்ரீ, கார்த்திக், ஷாஷா திருப்பதி, லிடியன் நாதஸ்வரம் மற்றும் கெபா ஜெரிமியா ஆகியோர் இடம் பெறும் இசை நிகழ்ச்சி.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

வெள்ளி, 12 பிப்ரவரி

நேர்காணல்: இவ்வாரத்தின் தீர்வு

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: கோகிலா, வழக்கறிஞர்

கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் தனது கணவன் அல்லது மனைவிக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் வழக்கறிஞர், கோகிலாவின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை