Home One Line P1 மாமன்னர் தம்பதியரின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

மாமன்னர் தம்பதியரின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

479
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளை சீன சமூகத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர்.

பிறக்கும் புத்தாண்டு, உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு வளப்பத்தையும், சிறந்த உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், நல்லெண்ணத்தையும் அளிக்கும் என மாமன்னர் தம்பதியர் நம்பிக்கை தெரிவித்தனர். மலேசியர்கள் ஒருவருக்கொருவருடன் பரஸ்பர நல்லிணக்கத்தைப் பேணுவதோடு, விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் கொண்டாட்டங்களுக்கு இடையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக மக்கள் இருக்க வேண்டும் என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.