Home One Line P2 ‘ஜோடி@ராகா’ – திறமைகளுக்கானப் போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வு

‘ஜோடி@ராகா’ – திறமைகளுக்கானப் போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வு

558
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் பிப்ரவரி 19 வரை ‘ஜோடி@ராகா’, திறமைகளுக்கானப் போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. 6 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசுத் தொகையில் ஒரு பகுதியை வெல்லும் ஓர் அரிய வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கும் .

‘ஜோடி@ராகா’ போட்டிப் பற்றிய சில விவரங்கள்

• 2021 பிப்ரவரி 19 வரை நடைபெறும் ராகாவின் திறமைகளுக்கானப் போட்டியான ‘ஜோடி@ராகா’-இன் மெய்நிகர் நேர்முகத்தேர்வில் (ஆடிஷன்) கலந்துக் கொள்ளும் அனைத்து திறன்மிக்க மலேசியர்களும் மொத்த ரொக்கப் பரிசுத் தொகையான 6 ஆயிரம் ரிங்கிட்டில் ஒரு பகுதியை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் ஓர் அரிய வாய்ப்பைப் பெறுவர்.

• ஆர்வமுள்ள போட்டியாளர்கள் தங்கள் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் வழியாக மெய்நிகர் நேர்முகத்தேர்வில் (ஆடிஷன்) கலந்துக் கொள்ளலாம். போட்டியின் காலக்கட்டத்தில் பங்கேற்பாளர்களின் இன்ஸ்டாகிராம் ‘பொது’ (public) என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

• பாடல், நடனம், நடிப்பு, தனிநபர் நகைச்சுவை உரை (ஸ்டாண்டப் காமெடி -standup comedy) மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அவர்களின் சிறப்புத் திறமைகளை ஜோடியாக வெளிப்படுத்தும் ஒரு நிமிடக் காணொலியைப் போட்டியாளர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதோடு #jodiatraaga என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும். மேலும், @raaga.my-ஐயும் டேக் (tag) செய்ய வேண்டும். படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பாடல் ராகா அகப்பக்கத்தில் வழங்கப்பட்டப் பாடல் பட்டியலிலிருந்துத் தேர்வுச் செய்யப்பட்டதாக இருத்தல் அவசியம்.

• பெறப்பட்டச் சமர்ப்பிபுகளிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறந்தப் போட்டியாளர்களின் காணொலிகள் மலேசியர்களின் வாக்களிப்பிற்காக ராகாவின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சிறந்த 5 திறமையான ஜோடிகளை தேர்ந்தெடுக்க அனைத்து மலேசியர்களும் தங்களுக்கு பிடித்த படைப்பிற்கு 2021 பிப்ரவரி 22 முதல் 26 வரை வாக்களிக்கலாம்.

• மார்ச் 1 முதல் 7 வரை நடைபெறும் மற்றொரு வாக்களிப்புச் சுற்றை இச்சிறந்த 5 திறமையான ஜோடிகளும் எதிர்க்கொள்வர். மேலும் மார்ச் 6-ஆம் தேதி, ராகாவின் முகநூல் வழியே நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும் இறுதிச் சுற்றிலும் போட்டியிடுவர்.

• ‘ஜோடி@ராகா’ போட்டியின் சிறந்த 3 வெற்றியாளர்கள் மொத்தம் 6,000 ரிங்கிட் ரொக்கப் பரிசுத் தொகையை வீட்டிற்கு எடுத்துச் செல்வர்: முதலாம் நிலை வெற்றியாளர்கள் 3000 ரிங்கிட், இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் 2000 ரிங்கிட், மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் ம1000 ரிங்கிட்.

ஜோடி@ராகா பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடர்க.

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw