Home One Line P1 திமுக உதயசூரியன் சின்னம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

திமுக உதயசூரியன் சின்னம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

497
0
SHARE
Ad

சென்னை: ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞர்களைக் கொண்டு புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதில், திமுகவின் உதயசூரியன் சின்னம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சியில் திமுக கட்சியின் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் 6,200 திமுக இளைஞர் அணி தொண்டர்கள் ஒன்றிணைந்து நின்றனர். இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். உலக சாதனைப் படைத்த சான்றிதழை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

வோர்ல்டு கார்ட்ஸ் யூனியன் (world cards union) என்ற உலக சாதனை புத்தகத்திலும், Asia books of records என்ற ஆசியா சீனா புத்தகத்திலும் அது இடம் பிடித்துள்ளது.