Home One Line P1 மாவட்ட எல்லைகள் எங்கு முடிவடைகிறது என்பது வாகன ஓட்டிகளுக்குத் தெரியாது!

மாவட்ட எல்லைகள் எங்கு முடிவடைகிறது என்பது வாகன ஓட்டிகளுக்குத் தெரியாது!

416
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 10 கி.மீ சுற்றளவு வரம்பைக் கடைப்பிடிப்பது இனி சுலபமானது அல்ல என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறுகையில், ஒரு மாவட்டம் முடிவடைந்து எங்கு தொடங்குகிறது என்பது வாகன ஓட்டிகளுக்குத் தெரியாது. எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“இது மக்களின் கருத்துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவாகிறது,” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகியவை மார்ச் 4 வரை நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் இருக்கும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது.

“கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூருக்குள் எல்லைகளை கடக்க வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய பல முக்கிய சாலைகள் உள்ளன,” என்று லீ கூறினார்.

மாவட்டங்களின் சரியான எல்லை நிர்ணயம் காவல் துறைக்கு மட்டுமே தெரியும் என்று அவர் கூறினார்.

கெடா, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், திரெங்கானு, கிளந்தான் மற்றும் கூட்டரசு பிரதேசங்களான புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகியவை பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் இருக்கும் என்று நேற்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.