Home One Line P1 நாடாளுமன்ற இடைநீக்கத்திற்கு எதிராக அசாலினா கடிதம்

நாடாளுமன்ற இடைநீக்கத்திற்கு எதிராக அசாலினா கடிதம்

435
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தகுந்த வழிகளைத் தேடாமல் நாடாளுமன்ற அமர்வு தொடர்ந்து இடைநிறுத்தம் செய்யப்படுள்ளதை பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சட்டத்துறைத் தலைவருக்கு வெளியிட்ட ஒரு கடிதத்தில், அவசரநிலை ஆகஸ்டு 1 வரையில் நடப்பில் இருக்கும் பட்சத்தில் தற்காலிக அமைச்சரவையை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

” சுமார் 17 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி இருப்பதால், மற்ற நாடுகளைப் போலவே நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்த ஏன் நம்மால் முடியவில்லை, ஏன் பிற வழிமுறைகளைப் பயன்படுத்த மறுக்கிறோம் என்பதில் நான் திகைத்துப் போகிறேன்,” என்று அவர் எழுதியுள்ளார்.