Home One Line P2 எலிசபெத் இராணியார் கணவர் மருத்துவமனையில் அனுமதி

எலிசபெத் இராணியார் கணவர் மருத்துவமனையில் அனுமதி

620
0
SHARE
Ad

இலண்டன் : பிரிட்டனின் எலிசபெத் இராணியாரின் கணவர் இளவரசர் பிலிப்ஸ் (படம்) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

99 வயதான அவர் இலண்டனில் உள்ள மருத்துவமனைக்கு கார் மூலம் கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவருக்கு அவசர சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக் குறிப்பு தெரிவித்தது.

அவரது உடல் நலக் குறைவு கொவிட்-19 சம்பந்தப்பட்டதல்ல என்றும் அரண்மனை செய்திக் குறிப்பு தெரிவித்தது.

#TamilSchoolmychoice

அவர் உடல் நலக் குறைவு கண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது.