Home One Line P1 விக்னேஸ்வரன், ஜோகூர் இளவரசருடன் சந்திப்பு

விக்னேஸ்வரன், ஜோகூர் இளவரசருடன் சந்திப்பு

542
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 18) ஜோகூர் மாநில சுல்தானின் புதல்வரும், ஜோகூர் இளவரசருமான மேஜர் ஜெனரல் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராகிமை மரியாதை நிமித்தம் சந்தித்து அளவளாவினார்.

இந்தச் சந்திப்பு ஜோகூர் பாசீர் பெலாங்கி அரண்மனையில் உள்ள போலோ கிளப்பில் நடைபெற்றது.

அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை விக்னேஸ்வரன் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் இளவரசரின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்திலும் விக்னேஸ்வரன் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் பகிரப்பட்டன.