‘Fobia Malam Pertama, 2014’ திரைப்படத்தை இயக்கியப் புகழ்பெற்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர், முரளி அப்துல்லா இயக்கிய அப்பளசாமி அபார்ட்மென்ட் எனும் 26 அத்தியாயங்களைக் கொண்டப் பெருங்களிப்பு தொடரில், எஸ். கானா, ரமேஷ், டத்தோ ஷாஷாஸ்ரீ, தோக்கோ சத்தியா, குபேன், சுரேஹா குட்டி, சந்தினி கோர், தீபாஸ்ரீ நாயர், மற்றும் சுபாஸ்ரீ உள்ளிட்டப் பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். இயக்குநர் முரளி அப்துல்லா இயக்கிய முதல் தமிழ் தொடர், அப்பளசாமி அபார்ட்மென்ட்.
ஒரு நாள், உள்ளூர் அதிகாரிகள், அப்பளசாமி அபார்ட்மென்டிற்கு எதிரான முறைகேடு மற்றும் புகார்களினால் குற்ற எச்சரிக்கை அறிக்கை (summons) அனுப்புகின்றனர். அதிருப்தி அடைந்த அரவிந்த்சாமி, டைமன் பாபுவை பணியிலிருந்து நீக்கிவிட்டு, அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக 6 மாதங்களுக்குள் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய மேலாளரான ரூபாவதியை நியமிக்கிறார். அப்பளசாமி அபார்ட்மென்டில் உள்ள சிக்கல்கள் எவ்வாறுத் தீர்க்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய தொடரைக் காண்க.